Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி-யில் சமுத்திரகனியின்…. வெள்ளை யானை படம் ரிலீஸ்…!!!

சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள வெள்ளை யானை படத்தை சன் டிவி நேரடியாக வாங்கியுள்ளது.

சுப்ரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள படம் வெள்ளை யானை. இந்தப் படத்தை வினோத் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள காரணத்தினால், ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில்இந்த  படத்தை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சன் டிவி தொலைக்காட்சியில் நேரடியாக இப்படத்தை ஒளிபரப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதற்குப்பிறகு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |