Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனி நடிப்பில் ‘வெள்ளை யானை’ … படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகியுள்ள ‘வெள்ளையானை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமாகிய சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘வெள்ளை யானை’ . இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடித்துள்ளார் . இந்த படத்தில் நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ளார் .

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு இயக்குனர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘வெள்ளை யானை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த ட்ரெய்லரில் இருந்து விவசாயத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது .

Categories

Tech |