‘ரைட்டர்’ திரைப்படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இயக்குனர் ஃபிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”ரைட்டர்”. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், மகேஸ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை சமூக வலைத்தளப்பக்கத்தில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.