Categories
தேசிய செய்திகள்

அடடே…. சபரிமலைக்கு செல்ல இப்படி ஒரு ஏற்பாடா?…. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதிலும் குறிப்பாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கொரோனா குறைந்து வந்ததை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் வசதிமிக்க பக்தர்கள் இங்கு வருகை புரிவதற்கு ஹெலிகாப்டரின் வரும் வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்பாக சபரி மலைக்கு அருகேயுள்ள நிலக்கல் பகுதியில் ஒரு விமான தளம் திருவாங்கூர் தேவசம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் சேவை வழங்கும் திட்டத்தை கொச்சியில் இருந்து நிலக்கல்லுக்கு தொடங்கியது. இதற்கு தகுந்த வரவேற்பு கிடைக்காததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. ஆகவே இதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மற்றும் வசதிமிக்க பக்தர்களின் பயணத்தை எளிதாக்கவும் ஹெலிகாப்டர் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு திருவாங்கூர் தேவசம் வாரியம் அழைப்பு விடுத்து உள்ளது. அதன்படி 3 ஆண்டுகளுக்கு அதிக தொகைக்கு ஏலம் கேட்கும் விமான நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட தேவசம் போர்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு ஒரு முறை விமானம் தரையிறங்குவதற்கு வாரியம் 20,000 கட்டணமாக வசூலித்து வருகிறது. இவ்வாறு விமான சேவையை வழங்குவதன் மூலம் விஐபிக்கள் மற்றும் வசதிமிக்க பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வருகை புரிவார்கள். இதன் காரணமாக கோவிலின் வருமானமும் அதிகரிக்கும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |