Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சஞ்சீவிராயன் பெருமாள் கோவில்” கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

காரிமங்கலம் சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள சஞ்சீவிராயன் பெருமாள் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் முயற்சியால் சீரமைக்கப்பட்டது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, முதல் கால யாக பூஜை போன்றவை நடைபெற்றது. இதனையடுத்து விழாவில் யாகசாலையில் இருந்து புனிதநீர் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது.

அப்போது சக்கரவர்த்தி பட்டாச்சாரியா தலைமையில் பட்டாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதன்பின் சுவாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் காட்டுசீகல அள்ளி, மணிக்கட்டியூர், சின்னாண்டியூர், காவேரிகவுண்டர் கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Categories

Tech |