Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க…. அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

லாரியில் மணல் அள்ளிய 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷுக்கு மொட்டனம் பட்டியில் அனுமதியின்றி தனியார் நிலத்திலிருந்து மர்மநபர்கள் லாரியில் மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மர்மநபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி 2 டிப்பர் லாரிகளில் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்து உள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினரை பார்த்தவுடன் அந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன் காவல் துறையினர் பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல்  கடத்திய 4 மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |