மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைபாக்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் பல மூட்டைகளில் மணல் கடத்திச் சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.