மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியான சிவகுமார் என்பவர் தனது உதவியாளர்களுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வல்லரசு என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வல்லரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.