Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் கடத்தல்….. அதிகாரி அளித்த புகார்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள கோடாலிகருப்பூர் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திச் சென்றதை கிராம நிர்வாக அதிகாரி பார்த்துள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய குற்றத்திற்காக பிரபாகரனை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |