மணல் மூட்டைகள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டதிலுள்ள ஏலாக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்துவதற்கு முயற்சி செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் சரக்கு ஆட்டோ ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதன் பின் காவல் துறையினர் நடத்திய சோதனையில் சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக கள்ளங்குடி கிராமத்தில் வசிக்கும் வெற்றி செல்வன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.