மணல் திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலப்பட்டி பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஓடையில் இருந்து மாட்டு வண்டிகளில் சிலர் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிக் கொண்டு இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து மணல் அள்ளிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் ஜெயக்கொடி மற்றும் பெருமாள் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.