Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீஸார்….. மடக்கிப் பிடித்த லாரி…. சிக்கிய மணல் கொள்ளையன்….!!

லாரியில் மணல் கடத்தியவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் இதர காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செய்யாற்றில் இருந்து ஒரு டிப்பர் லாரி அந்த வழியாக வந்துள்ளது.

அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் மணல் சட்டத்திற்கு விரோதமாக கடத்தி வரப்பட்டது என்பதை அறிந்த காவல் துறையினர் விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ராமானுஜம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |