சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு சதீஷ் என்பவரையும் காவிரி ஆற்றுப் பாலம் அருகில் மது விற்பனையில் ஈடுபட்ட துரைராஜ் என்பவரையும் விஷ்ணம்பேட்டை பகுதியில் மது விற்ற சோமு என்பவரையும் பூண்டி நாகாச்சி வளைவு பகுதியில் மது விற்ற அன்பழகன் என்பவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.