மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் இருக்கும் மேட்டூர் ஆற்றுப்படுகை அருகில் தாலுகா காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, கோபி ஆகிய 2 பேரும் இரண்டு மாட்டு வண்டிகளில் அந்த வழியாக மணல் கடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரித்தபோது இருவரும் மணல் கடத்தியது தெரிய வந்துள்ளது.
அதன்பின் போலீசார் அந்த 2 பேரை கைது செய்து மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.