அனுமதியின்றி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 2 பேர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். அதே பகுதியில் வசித்து வருபவர் சாதிக் பாட்சா. இவர்கள் இருவரும் சேர்ந்து நெய்வேலி பகுதியில் உள்ள ஆற்றில் திருட்டுத்தனமாய் மணல் அள்ளி நெய்வேலி சோளம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.