அனுமதியின்றி மணல் அள்ளிய 3 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருக்கருகாவூர் பகுதியில் உள்ள வெற்றாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் கண்டனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்த போது வைரமுத்து, சின்னப்பா, சுரேஷ்குமார் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஹிட்டாச்சி எந்திரம் மற்றும் ஒரு லாரியையும் பறிமுதல் செய்து உள்ளனர். அதன்பின் இந்த 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.