இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காரை பகுதியில் வசித்து வருபவர் அசோக்குமார். இவர் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் பாலாற்றில் இருந்து மணலை கடத்தி வந்துள்ளார். இவர் காரை பகுதியில் இருக்கும் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரித்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் கடத்தி வந்த மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.