Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தொடரும் திருட்டு சம்பவம்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது மணல் கடத்தி வந்த மாட்டுவண்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை, பரம்பூர், கோணாங்குறிச்சிப்பட்டி, கிளிக்குடி ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருக்கும் போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களை விசாரணை செய்த பின்பு அவர்களிடமிருந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |