மணல் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு, தப்பி ஓடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கே.வி. குப்பம் போலீசார் மேல் காவனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு வந்ததை போலீசார் கண்டனர். அதன்பின் போலீசார் வருவதை பார்த்த மூவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களில் இருவரை மடக்கி பிடித்து விட்டனர். ஆனால் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதன்பின் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர்கள் அதே பகுதியில் வசித்து வரும் செல்வம் மற்றும் தேவன் என்பதும், தப்பித்து ஓடிய மற்றொருவர் அருண் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மாட்டுவண்டி பயன்படுத்தி மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய அருணை போலீசார் வீசி தேடி வருகின்றனர்.