வாகன சோதனையின் பொது மணல் கடத்தியதற்காக குற்றத்திற்காக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பழைய தர்மபுரியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்துகொண்டிருந்த காவல்துறையினர் ஒரு லாரியில் மணல் கடத்தி வந்தததை சோதனை மூலம் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் அந்த லாரி டிரைவரை விசராணை செய்த பொழுது, அந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இருந்து வந்தது என்று லாரி பற்றிய தகவலை அவர் மூலம் காவல்துறையினர் உறுதிபடுத்திக் கொண்டனர். இதனால் காவல்துறையினர் லாரி டிரைவரான முருகன் என்பவரை கைது செய்து, அந்த லாரியையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.