Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக… வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

போலீசார் மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை கைது செய்ததோடு, அதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து விட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்பூண்டி கிராமத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். இதனையடுத்து அந்த லாரியை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து கல்பூண்டி பகுதியில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரை மணல் கடத்திய குற்றத்திற்காக போலீசார் கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்துவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |