Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தாராபுரம் வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த மணல் திருட்டு கும்பல்..!!

தாராபுரம் வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த மணல் திருட்டு கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  தாராபுரம் அருகே ஆற்று மணல் திருட்டை தடுக்க சென்ற கன்னிவாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார், அமராவதி ஆற்றின் மையப் பகுதியில் மணல் திருட்டை முயற்சி செய்தார்.அப்போது எதிரே வந்த மணல் கடத்தல் கும்பல் மினி வேனைக் கொண்டு ஆய்வாளர் கார்த்திக்குமார்  மீது மோதினர். இதில் சில காயங்களுடன் உயிர் தப்பினார்.

Image result for manal thiruttu

மேலும் காயமடைந்த வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த  புகாரின் பேரில் வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த கும்பல்களை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |