கடைமடை பகுதியில் நடைமுறைப்படுத்தவுள்ள கட்டுமான பணிக்கு தேவைப்படும் மணலை சட்ட விரோதமாக ஆற்றிலிருந்து அள்ளுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் மணலுக்கான தொகையை ஒப்பந்தப் புள்ளியில் உள்ள நிலையில்,ஆற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல வேண்டும் என்பதற்காக,
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நீடாமங்கலம் ஆதிச்சபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள் வாய்க்கால்களில் தடுப்புச்சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்கு ஆகும் தொகை ஒப்பந்தப்புள்ளிகளில் இணைக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி இல்லாமல் மணல் எடுத்து பயன்படுத்துவதுடன் மணலை லாரி லாரியாக வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.