Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மணல் திருட்டு” சொந்த டிராக்டரை கைவிட்டு தலை தெறிக்க ஓடிய திருடர்கள்…. போலீசார் தீவிர விசாரணை…!!

குடியாத்தம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர் அதன் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பாலாறு உள்ளிட்ட நதிகளில் இருந்து இரவு பகலாக தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர் குடியாத்தம் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

Image result for மணல் திருட்டு

இந்த நிலையில் அக்ரஹாரம் பகுதிகளில் கவுண்டனை மகான் ஆற்று மணல் அள்ளி கொண்டு இருந்தவர்களை ரோந்து பணி அதிகாரிகள் கண்டு தப்பி ஓடிய நிலையில் அங்கிருந்த டிராக்டரை ரோந்து பணி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோன்று நொடி குப்பம் பகுதியில் உள்ள ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓட அங்கிருந்த டிராக்டரும் பறிமுதல் செய்த குடியாத்தம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ட்ராக்டர் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |