பாஜக கட்சியில் இணைய போவதாக வெளியான செய்தி குறித்து நடிகர் சந்தானம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக கட்சியில் சமீப காலங்களாக பிரபல நடிகர்கள், பிரபலங்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில், நடிகர் சந்தானம் பாஜக கட்சியில் இணையப் போவதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சந்தானம் தற்போது விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தான் பாஜகவில் இணையப் போவதாக வந்த செய்தி வதந்தி என்றும், தான் நடித்து வெளியாகியுள்ள பிஸ்கோத்து படத்தில் வரக்கூடிய காமெடி களை விட பெரிய காமெடி, நான் பாஜகவில் இணைய போவதாக வரும் வதந்தி தான். மக்கள் அதனை சிரித்துவிட்டுப் போகட்டும் என கலாய்த்த படி கூறியுள்ளார்.