Categories
உலக செய்திகள்

மர்ம நபர்களுடன் நடந்த மோதல்…. ராணுவ வீரர் உயிரிழந்த சோகம்…. டுவிட்டரில் வெளியான முக்கிய தகவல்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டினுடைய ராணுவ வீரர்களுக்கும், மர்ம நபர்களுக்குமிடையே காபூல் விமான நிலையத்தின் நுழைவுவாயில் முன்பாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஆப்கன் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அந்நாட்டிலுள்ள ஏராளமானோர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்து வருகிறார்கள். அவ்வாறு காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளதால் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் காபூல் விமான நிலையத்தினுடைய நுழைவாயிலின் முன்பாக மர்ம நபர்களுக்கும், ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவ வீரர்களுக்குமிடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஆப்கான் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களில் 3 பேர் படுகாயமடைந்ததோடு மட்டுமின்றி 1 ராணுவ வீரரும் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை ஜெர்மன் நாட்டின் ஜாயின் போர்ஸ் ஆபரேஷன் கமெண்ட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |