உலகின் மிகவும் ஆபத்தானவை இந்த கோப்ரா வகை பாம்புகள் ஆகும். அந்த பாம்பு மெதுவாக ஊர்ந்து போகும்போதிலும், அதன் கொடிய இயல்பின் காரணமாக உயிர் இழப்பை ஏற்படுத்தக்கூடியது. உலகம் முழுவதும் 3,000 வகையான பாம்பு இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் 20 சதவீத பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை உடையவை ஆகும். இந்திய துணைக்கண்டத்தில் உள்ள கோப்ரா, ரசல்ஸ் வைப்பர், சா-ஸ்கேல்ட் வைப்பர் மற்றும் காமன் க்ரைட் போன்ற 4 வகை பாம்புகளும் ஆபத்தானது ஆகும்.
அந்த வகையில் 3 கோப்ரா வகை பாம்புகள் தங்களுக்குள் கோபத்தில், சண்டையிட தயாராக இருக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைளங்களில் வைரலாகி வருகிறது. 3 நாக பாம்புகளும் சண்டை போடலாமா?… வேண்டாமா?.. என்று யோசிப்பதைப்போல படமெடுத்து நின்றுகொண்டிருக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோவை 8,500-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
https://www.instagram.com/reel/CXfbPgFDLfY/?utm_medium=copy_link