சண்டை மற்றும் சமாதானம் இரண்டிற்குமே தயாராக இருக்க வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
வடகொரியாவில் தலைநகர் Pyongyang நடந்த மூத்த தலைவர்களுடனான கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க நாட்டுடனான சண்டை மற்றும் சமாதானம் இரண்டிற்குமே தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
அதோடு பைடன் நிர்வாகம் குறித்து அதிபர் கிம் ஜாங் உன் நேரடியாக கருத்து தெரிவித்துள்ளது இதுவே முதல் முறையாகும். மேலும் பேசிய அவர் நாட்டின் கண்ணியத்தையும் சுயாதீன வளர்ச்சிக்கான நலனையும் பாதுகாக்க மோதலுக்கும் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் வடகொரியாவின் அமைதியான சூழல் மற்றும் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.