சந்தன மரம் வெட்டியவரை வனத்துறையினர் அதிரடியாக மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள சீரானபுரம் காப்புக்காட்டில் அருணா என்ற வனவர் வசித்து வருகிறார். அவருடன் சேர்ந்து வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மாதேஷ் என்பவர் சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். மாதேஷ் வன காவலர்களை கண்டதும் அவர்களிடமிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
ஆனால் காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்பு வனத்துறையினர் மாதேஷை கைது செய்து அவரிடம் இருந்த 3 கிலோ சந்தனக் கட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.