Categories
அரசியல் மாநில செய்திகள்

செருப்பு இங்க தான் இருக்கு…. வந்து வாங்கிட்டு போங்க… கலகலப்பாக ட்விட் போட்ட பி.டி.ஆர்…!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தியதோடு, பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையையும் பல இடங்களில் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், காலணியின்  புகைப்படத்தை வெளியிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட் செய்துள்ளார். அதில் நேற்று தனது காரின் மீது பாஜகவினரால் வீசப்பட்ட காலணி போட்டோவை பகிர்ந்து, இந்த காலணி பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் வந்து பெற்றுக் கொள்ளவும் என ட்விட் போட்டுள்ளார்.

Categories

Tech |