சந்தன மரங்களை வெட்டி கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்சச் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட பகுதியில் விலை உயர்ந்த சந்தன மரங்கள் இருக்கின்றன. இந்நிலையில் 5 விலை உயர்ந்த சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தன மரங்களை கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து குன்னூர் பகுதியில் வசிக்கும் நாகராஜ், நடராஜ் ஆகிய 2 பேர் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகராஜ் மற்றும் நடராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.