சன் டிவியில் மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். ஆனால் சன் டிவியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவாகவே ஒளிபரப்பப்படுகிறது. இதனால் சன் டிவி தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால், “மாஸ்டர் செப்” என்ற பெயரில் ஒரு சமையல் போட்டி தொடங்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ஒரு வாரம் மூன்று கோடி ரூபாய் சம்பளம் தரப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பல சேனல்களில் இதுபோன்ற சமையல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சன் டிவியும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.