Categories
உலக செய்திகள்

சீனாவின் முக்கிய நகர் முழுக்க சூழ்ந்துகொண்ட புழுதிப்புயல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

சீனாவின் ஒரு நகரத்தில் முழுவதுமாக புழுதிப்புயல் சூழ்ந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் கன்சுவில் என்ற மாகாணத்தில் இருக்கும் கோபி பாலைவனத்தின் எல்லை பகுதியில் இருக்கும் டன்ஹீவாங் என்ற நகரத்தில் முழுவதுமாக புழுதிப்புயல் சூழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டன்ஹீவாங் நகரத்தில் இன்று திடீரென்று புழுதிப்புயல் உருவானது. இது சுமார் 300 அடி உயரத்திற்கு எழுந்திருக்கிறது. இந்த புயலானது, ஐந்தே நிமிடங்களில் அந்நகரம் மொத்தமும் சூழ்ந்துகொண்டது. இதனால் பதறிய அப்பகுதியினர் தங்கள் குடியிருப்புகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டனர். இந்த சம்பவம், குறித்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |