ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கோட்டைமேட்டு காலனி பகுதியில் வசித்து வரும் சாலமன் என்பவர் அப்பகுதியில் தேவ ஆலயம் ஒன்று நிறுவி ஊழியம் செய்து வருகின்றார். இவருக்கு ரூபி என்ற மனைவியும் ரூபன் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் திண்டிவனத்தில் இருந்து ஜான்சன் (9) மற்றும் சைமன் (10) இருவரும் சாலமன் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனிடையே நேற்று மாலை ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரே உள்ள ரஷீத் கேண்டீனுக்கு சாலமன் ரூபியும் குழந்தைகளுடன் சாப்பிட சென்று உள்ளனர்.
அப்போது அந்த கேண்டினில் குழந்தைகள் 3 பேரும் சாண்ட்விச் சாப்பிட்டனர்.அதனை சாப்பிட்ட சிறுவர்களுக்கு சிறிது நேரத்தில் ஒவ்வாமை காரணமாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் உடனே ஆர்க்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் புட் பாய்சன் என தெரிவித்துள்ளனர்.இதனால் உடல்நிலை மோசமான நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கேண்டினில் தற்போது ஆய்வு செய்த போது காலாவதியான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.