Categories
மாநில செய்திகள்

கிருமியை கொல்றது தான் வேலை…. தீண்டாமையை வளர்ப்பதல்ல…. காரி துப்பிய சனிடைசர்….. வைரலாகும் போட்டோ….!!

இப்ப காலம் மாறி போச்சு, யாரும் சாதி பார்ப்பதில்லை. அனைவரும் சமத்துவத்துடன்  தான் பழகிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சிலர் சுலபமாக கூறிவிட்டு கடந்து செல்வதை நம்மில் பலர் கண்டிருப்போம். ஆனால், உண்மை என்னவென்றால் தற்போதுதான் நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது முன்பெல்லாம் சாரி பெயரை குறிப்பிட்டு அவர்களை அருகில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்து துன்புறுத்துவார்கள் ஆனால் தற்போது ஹைஜீனிக் என்ற வார்த்தையை பயன்படுத்தி நவீன தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த வார்த்தை மூலம் அவர்கள் சுத்தத்தை முறையாக கடைபிடிப்பதில்லை என்று கூறி தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இந்த சமூகம் யாரை சுத்த மற்றவர்கள் என ஒதுக்கி வைக்கிறதோ ? அவர்கள் தான் இந்நாடே தூய்மையாக சுத்தமாக இருப்பதற்கு நாள்தோறும் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

இந்நிலையில் இந்த நவீன தீண்டாமையை சுட்டிக்காட்டும் விதமாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பிகில் படத்திலும், தற்போது சூர்யா நடித்து வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திலும் கதாநாயகர்கள் வில்லனிடம் கைகொடுத்து பேசிய பிறகு அவர்கள் சனிடைசரை  கொண்டு கையை சுத்தம் செய்யும் காட்சியை நாம் கண்டிருப்போம்.

இது அவர்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பதற்கான அறிகுறியாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதை மையமாக வைத்து, “கிருமிகளைக் கொல்வது மட்டும் தான் என் தொழிலே தவிர, தீண்டாமையை வளர்ப்பது அல்ல” என்று காறித் துப்பியது சனிடைசர் என, சனிடைசர் பேசுவதுபோல மீம்ஸ் தயார் செய்து பதிவிட்டுள்ளனர். இது தற்போது பலரது கவனத்தை ஈர்த்து அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

Categories

Tech |