நாடு முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகளும் போராடிவருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மாநகராட்சியால் ஊழியர்களுக்கு கடைபிடிக்கப்படும் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும் ரிப்பன் மாளிகை முன்பு ஆர்ப்பட்டத்தை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதனால், மாநகாராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் பெருதும் பாதிப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.