புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
கடலை மிட்டாய் உண்பது வெறும் சுவைக்காக மட்டும் அல்ல அந்த உண்டால் நம் உடலுக்கு பலம், ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி பிறக்கும். இந்த உலகத்தில் பல வகையான கடலை மிட்டாய்களை நீங்கள் சுவைத்திருக்கலாம், அனால் நல்ல தரமும், சுவையும் இருப்பது இந்த கோவில்பட்டி கடலை மிட்டாயில் மட்டும் தான் தரமான கடலைகளை தேர்ந்தெடுத்து சுத்தமான முறையில் இந்த கோவில்பட்டி கடலைமிட்டாய் தயார் செய்கிறார்கள்.
இது மட்டுமில்லாமல் இங்கு விளையும் கடலையும் மிக தரமானகவும் இருப்பதால் இந்த கடலை மிட்டாய் இயற்கையாகவே மிக அதிக ருசி பெறுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்று நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். புவிசார் குறியீடு கோரி 2014ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு வழங்கியுள்ளது. புவிசார் குறியீடு கிடைத்தால் கோவில்பட்டியை தவிர வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் “கோவில் பட்டி கடலை மிட்டாய்” என்ற பெயரை பயன்படுத்த முடியாது குறிப்பிடத்தக்கது.