மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைமை கண்காணிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி இன்று குடியரசு தலைவர் மாளிகையில் பதிவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக K.V.சவுத்ரியின் செய்லபடு வந்தார்.
இவரது பதவிக்காலம் பதவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிந்தது. இதையடுத்து தலைமை பொறுப்பு காலியாக இருந்தது. இந்த நிலையில், குடியரசு தலைவரின் செயலாளராக இருந்த சஞ்சய் கோத்தாரி-யை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை கண்காணிப்பு ஆணையராக நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு கடந்த மாதம் பரிந்துரைத்தது.
இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. சஞ்சய் கோத்தாரி-யை நியமிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்தன. இந்த நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பை மீறி இன்று சஞ்சய் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போதிய இடைவெளி விட்டு அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.