அரை இறுதியில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து சஞ்சய் மஞ்சரேகர் பாராட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் ஜடேஜா ஒரு “துண்டு துக்கடா வீரர்” என்றும், ஒரு நாள் போட்டியில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தான் தேர்வு செய்திருப்பேன். நான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்க மாட்டேன் என்றும் கடுமையாக ஜடேஜாவை விமர்சித்தார். இதற்கு ஜடேஜாவும் நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் 2 மடங்கு விளையாடிவிட்டேன்.சாதித்தவர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்தார். இது சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது.
இப்போட்டியில் முன்னணி வீரர்கள் ரோகித் 1, கோலி, கேஎல் ராகுல் 1 என ஆட்டமிழந்து ஏமாற்றினர். இருப்பினும் 8-ஆவது வீரராக களமிறங்கிய ஜடேஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதனால் இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. சிறப்பாக ஆடி வந்த நிலையில் நியூசிலாந்து பக்கம் பதற்றம் தொற்றியது.
ஜடேஜா வெற்றிக்கு மிக அருகில் வந்து 59 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர் 3 பவுண்டரிகளும் அடங்கும். இது மட்டுமில்லாமல் ஜடேஜா 10 ஓவர் வீசி 1 விக்கெட், 3 கேட்ச் பிடித்துள்ளார். ஒரு ரன் அவுட் செய்துள்ளார். மொத்தத்தில் ஆல் ரவுண்டராக ஜொலித்துள்ளார்.
இந்திய அணி தோற்றாலுமே ஜடேஜாவின் இந்த ஆட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜடேஜாவின் ஆட்டம் குறித்து சஞ்சய் மஞ்சரேகர் “சிறப்பாக விளையாடினாய் ஜடேஜா” என்று பாராட்டியுள்ளார்.
Well played Jadeja! 😉
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) July 10, 2019