பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
பாலிவுட் நடிகரான சஞ்சய்தத்துக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி மற்றும் சுவாச கோளாறு ஏற்படவே அவரை லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டனர்.
ஆனால் பரிசோதனையின் முடிவில் நெகட்டிவ் என வந்தது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனை என வந்ததால் இப்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பின் அடிப்படையில் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.