தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், சாம், பிரபு போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் விசுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். அதன் பிறகு தற்போது UK-வில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார்.
சஞ்சய் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பாக அதைப் பற்றிய முழுமையான விஷயங்களை படித்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறாராம். ஆனால் சஞ்சய்க்கு படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தற்போது குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இருப்பினும் படங்களில் நடிப்பதை விரும்பாத சஞ்சய் ஒரு இயக்குனராக மாற வேண்டும் என்பதில்தான் ஆர்வமாக இருக்கிறார். இதுகுறித்து தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது சஞ்சய் கூடிய விரைவில் இயக்குனராக அறிமுகமாவார் என்றும், முதல் படத்தை தந்தை விஜய்யை வைத்து எடுக்காமல், பிரபல நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தான் எடுப்பார் என்றும் கூறியுள்ளார்.