இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவிருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளிவராது என்று படக்குழு தெரிவித்தது.
லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என கமர்ஷியல் கலப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை, லிப்ரா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.அடுத்த மாதம் (நவம்பர்) 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, படம் ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.