மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நடைபெற்றுவருகிறது. அப்போது, மத்திய சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பாஜக அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்தார்.
திருக்குறளை அடிக்கடி குறிப்பிட்டு பேசும் மத்திய அரசு, உலகின் மிக பழமையான மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், செத்த மொழியான சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக அதிக பணம் ஒதுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.