தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலிறுத்தி பேசியுள்ளார். அதில், வரி வடிவங்களில் ஒன்று சமஸ்கிரத என்பது வரலாற்று உண்மை. அதற்கு தொன்மை இருக்கிறது. ஆனால் வரிவடிவம் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
அப்படி வரிவடிவம் இல்லாத மொழி தேவ நாகரீகம் என்ற எழுத்தை கடன் வாங்கி தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறது என்பதும் வரலாற்று உண்மை. அப்படிப்பட்ட நிலையில் ஒரே நாடு ஒரே மசோதா மூலம் ஒரு மொழிக்கு 3 பல்கலைகழகங்களை உருவாக்குகின்ற மத்திய அரசு. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளான தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகியவற்றுக்கும் பல்கலைக்கழகங்களை ஏன் உருவாக்கக் கூடாது என்பதைத்தான் இங்கு நாங்கள் கேள்வியாக எழுப்ப விரும்புகிறோம்.
தமிழுக்கு பிறகுதான் சமஸ்கிருதத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது அதன்பின் 2005 தான் சமஸ்கிருதத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. சமஸ்கிருதம் பெரியதா? தமிழ் பெரியாதா ? என்பது அல்ல கேள்வி அனைத்து மொழிகளையும் மத்திய அரசு மதிக்கிறதா? என்பதுதான் கேள்வி என்றார் திருமாவளவன்.