பெரு நாட்டில் உயரமான கட்டிடத்தில் கொரோனா காரணமாக தனிமையில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா தீயணைப்புத் துறையின் உதவி மூலம் பரிசு பொருட்களை வழங்கி வருகிறார்.
பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் விளையாட்டு போட்டிகளுக்காக கட்டப்பட்டுள்ள Pan American வில்லேஜ் கட்டிடத்தில் கொரோனா காரணமாக பல குடும்பங்கள் தனிமையில் உள்ளனர். அதில் சந்தோஷத்தை இழந்து சுமார் 120 குழந்தைகள் அந்த கட்டிடத்திலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கும் கிறிஸ்துமஸ் பரிசு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாண்டா கிளாஸ் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கிரேன் மூலம் ஜன்னல் வழியாக குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்வித்து வருகிறார்.