Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்… வெளியான தகவல்கள்…!!!

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

தமிழ்த் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் , டாக்டர் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘டான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும் , வில்லனாக எஸ்.ஜே .சூர்யாவும் நடிக்கின்றனர் .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . இந்தப் படத்தை சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது . இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |