Categories
உலக செய்திகள்

‘இவர்களுக்கும் வழங்கப்படும்’…. மகிழ்ச்சியில் வெளிநாட்டவர்கள்…. அமெரிக்கா குடியேற்ற அமைப்பு நடவடிக்கை….!!

வெளிநாட்டவருக்கு H1B விசா வழங்க குடியேற்ற ஒழுங்காற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்கான H1B ரக நுழைவு விசாவை தற்பொழுது சந்தை பகுப்பாய்வு நிபுணர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “அமெரிக்காவில் குடியுரிமை பெறாமலேயே அயல் நாட்டவர்கள் அங்கு தங்கியிருந்து நிறுவனங்களில் வேலை புரிவதற்கு H1B விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இதனை பெறுவதற்கு பணியாளர்கள் வேதியியல், இயற்பியல், கணிதம் போன்ற துறைசார்ந்த அனுபவமோ அல்லது தொழில்நுட்பத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையுள்ளது. இருப்பினும் சந்தை பகுப்பாய்வு பணியில் இருப்போரை மட்டும் தேர்ச்சி பெற்றவர்களாக அந்நாட்டின் குடியேற்ற ஒழுங்காற்று அமைப்பு அங்கீகாரம்  செய்யவில்லை.

இந்த நிலையில் சந்தை பகுப்பாய்வு நினைப்பவர்களுக்கும் H1B விசாக்களை வழங்கவேண்டும் என்று குடியேற்ற ஒழுங்காற்ற அமைப்பு மற்றும் அதனைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கம் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து இவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இறுதியாக இத்துறையில் இருப்பவர்களுக்கும் விசா வழங்க குடியேற்ற ஒழுங்காற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இது வெளிநாட்டவர்களுக்கு மட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களுக்கும் கிடைத்த வெற்றி என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |