Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவன பார்த்தா சந்தேகமா இருக்கு…. சோதனையில் சிக்கிய சிறுவன்…. வனத்துறையினரிடம் ஒப்படைப்பு….!!

சந்தன கட்டைகளை கடத்தி வந்த சிறுவனை பறக்கும் படையினர் பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல் வாழை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேருந்தில் சந்தேகப்படும் படி அமர்ந்திருந்த சிறுவன் குமார் என்பவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 15 கிலோ எடையுள்ள சந்தன கட்டைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெய்சங்கர் மூலமாக பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளையும் அதனை கடத்தி வந்த குமாரையும் வனத்துறை அதிகாரிகளிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்துள்ளனர். மேலும் சந்தன கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்படுகின்றது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என குமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |