சந்தன மரக்குச்சிகளை பதுக்கி வைத்திருந்த மூதாட்டிக்கு வனத்துறையினர் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் காப்புகாடு பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது காப்புக்காடு பகுதியில் ராணி என்பவர் அவருடைய வீட்டில் அரை கிலோ எடையுள்ள சிறு சிறு சந்தன மரக்குச்சிகள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டி மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.