சந்தன மரங்களை வெட்ட முயற்சி செய்த 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கட்டாஞ்சி மலை வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் வெளிச்சம் தெரிவதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது நான்கு நபர்கள் சந்தன மரங்களை வெட்ட முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.
அதன்பின் வனத்துறையினர் அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் மன்னார்காடு பகுதியில் வசிக்கும் மொய்தீன், முரளி, ஜெகதீஷ் மற்றும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தன மரங்களை வெட்ட முயன்ற குற்றத்திற்காக வனத்துறையினர் 4 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.